இந்தியா

பழமையான கோயில்களைப் புனரமைக்க ஒடிசா அரசு முடிவு!

கஞ்சம் மாவட்டத்தில் உள்ள 26 பழைமையான கோயில்களைப் புனரமைக்க ஒடிசா அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

DIN

கஞ்சம் மாவட்டத்தில் உள்ள 26 பழைமையான கோயில்களைப் புனரமைக்க ஒடிசா அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், 

முதல்வர் நவீன் பட்நாயக்கின் சொந்த ஊரான கஞ்சத்தில் உள்ள பெர்ஹாம்பூர் தவிர, 13 சட்டமன்றத் தொகுதிகளில் 12-ல் அமைந்துள்ள புராதன கோயில்களைப் புதுப்பித்தல், புனரமைத்தல் செய்ய ரூ.42.51 கோடியை அரசு அனுமதித்துள்ளதாக அவர் தெரிவித்தார். 
 
பொதுமக்களின் கோரிக்கைக்கிணங்க பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்களைப் புதுப்பிக்கவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. 

முன்னதாக, 997 கிராமக் கோயில்கள் புனரமைக்க அரசு ரூ.48.97 கோடி அனுமதித்தது. 

இந்த நிலையில், புராதன கோயில்களைப் புனரமைக்கும் திட்டங்கள் நிறைவேற்றுவதற்கான டெண்டர்கள் நடைமுறையில் உள்ளன என்றும் உதவி தலைமை பொறியாளர் துர்கா சரண் பெஹரா தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளைக் குவிக்கும் ரசவாதி!

சல்மான் கானுடன் இருப்பவர்களுக்கும் கொலை மிரட்டல்! 1998-ல் தொடங்கிய பிரச்னை!

மதுரை அழகர்கோயில் தேரோட்டம்!

தில்லியை திணறடிக்கும் மழை; இன்றும் ரெட் அலர்ட்

டிரம்ப் - புதின் சந்திப்பு! உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?

SCROLL FOR NEXT