கேரள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வடமாநில பெண்ணின் கைக்குழந்தைக்கு பெண் காவலர் ஒருவர் தாய்ப்பால் புகட்டிய சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
பிகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கேரள மாநிலத்தில் தனது கணவர் மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
பெண்ணின் கணவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் அந்த பெண் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். நான்கு குழந்தைகளுடன் எர்ணாகுளம் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்திருந்தார்.
பெண்ணுக்கு கடும் மூச்சுத் திணறல் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது நான்கு குழந்தைகளும் வார்டுக்கு வெளியே இருந்தனர்.
படிக்க: 12 ராசிக்குமான வாரப் பலன்கள்!
அதில் ஒரு குழந்தை பிறந்த நான்கு மாதமே ஆன நிலையில் தாயின் அருகே படுக்கையில் அனுமதிக்கப்பட்டது. குழந்தைகளைப் பராமரிக்க யாரும் இல்லாத நிலையில், உதவிக்காக கொச்சி நகர மகளிர் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
பின்னர், அழுதபடி இருந்த 4 மாதக் கைகுழந்தைக்கு சிவில் காவல் அதிகாரி ஆர்யா முன்வந்து தாய்ப்பால் கொடுத்து உதவினார். பின்னர் குழந்தைகள் பராமரிப்பு இல்லத்திற்கு மாற்றப்பட்டனர். ஆர்யாவின் இந்த செயலை அனைவரும் பாராட்டுத் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.