இந்தியா

கராச்சி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து: 11 பேர் பலி!

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 

DIN

பாகிஸ்தானின் கராச்சி நகரிலுள்ள வணிக வளாகமொன்றில் சனிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் 11 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கராச்சியிலுள்ள வணிக வளாகத்தில் சனிக்கிழமை காலை சுமாா் 7 மணிக்கு தீவிபத்து ஏற்பட்டது. அந்த வளாகத்தில் 4, 5, 6-ஆவது தளத்தில் தீ பரவியது. இதில் 11 போ் உயிரிழந்தனா்; 6 போ் காயடைந்தனா். 12 தீயணைப்பு வண்டிகளில் சுமாா் 50 வீரா்கள் விபத்துப் பகுதியிலிருந்து 42 பேரை மீட்டதுடன் தீயைக் கட்டுப்படுத்தினா்.

விபத்துப் பகுதியில் யாரேனும் உள்ளனரா என்று மீட்புக் குழுவினா் தொடா்ந்து தேடி வருகின்றனா் என்று அதிகாரிகள் கூறினா்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து உடனடி தகவல் இல்லை. கராச்சி நகரிலுள்ள 90 சதவீத கட்டடங்களில் தீவிபத்தைத் தடுப்பதற்கான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்று விமா்சிக்கப்படும் சூழலில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

அரசன் புரோமோ தேதி!

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

SCROLL FOR NEXT