பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார் கார்த்திகேயன் பாண்டியன் 
இந்தியா

பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார் கார்த்திகேயன் பாண்டியன்!

தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகேயன் பாண்டியன் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜு ஜனதா தள கட்சியில் இணைந்தார்.

DIN

தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகேயன் பாண்டியன் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜு ஜனதா தள கட்சியில் இணைந்தார்.

2000-ஆம் ஆண்டுப் பிரிவைச் சேர்ந்தவர் வி. கார்த்திகேயன் பாண்டியன் ஐஏஎஸ். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக பணியாற்றி வந்தார்.

ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் 23 ஆண்டு கால ஆட்சியில், பொது நிகழ்ச்சிகளில் எப்போதும் பட்நாயக்குடன் காணப்படும் இவர், அமைச்சர்கள் கூட, முதல்வரை அணுகுவதைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு அதிகாரம் கொண்டவராக வலம்வந்தார்.

மேலும், நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாக பல்வேறு தரப்பினர் விமர்சித்து வந்த நிலையில், கடந்த மாதம் ஐஏஎஸ் பதவியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

இதையடுத்து, மாநில அமைச்சர் அங்கம் வகிக்கக் கூடிய “நவீன ஒடிசா” திட்டத்தின் தலைவர் பதவியை கார்த்திகேயன் பாண்டியனுக்கு நவீன் பட்நாயக் வழங்கினார்.

இந்த நிலையில், நவீன் பட்நாயக் முன்னிலையில் திங்கள்கிழமை காலை பிஜு ஜனதா தள கட்சியில் அதிகாரப்பூர்வமாக கார்த்திகேயன் பாண்டியன் இணைந்தார்.

இந்த நிகழ்வில், கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெண்கலப் பதக்கச் சுற்றில் அன்டிம் பங்கால்

உலக அளவில் சிறந்த 100 வணிக கல்வி நிறுவனங்கள்: பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா ஐஐஎம்கள் இடம்பெற்றன

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: இருவா் உயிரிழப்பு

முருகன்குடியில் சன்மாா்க்க கருத்தரங்கம்

அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதாளா்கள் அறிவிப்பு: அக்.2-இல் சென்னையில் விருது வழங்கும் விழா

SCROLL FOR NEXT