முகப்பு
இந்தியா

பொதுக்கூட்டம், பேரணியில் பங்கேற்க சந்திரபாபு நாயுடுவுக்கு அனுமதி!

பொதுக் கூட்டங்கள், பேரணிகளில் பங்கேற்க தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:26 AM
சந்திரபாபு நாயுடு
பகிர்:

பொதுக் கூட்டங்கள், பேரணிகளில் பங்கேற்க தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கு ஊழல் நடைபெற்றதாக முன்னாள் முதல்வா் சந்திரபாபு நாயுடுக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, மாநில ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரை கடந்த செப்டம்பா் மாதம் கைது செய்தனா். ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அவா் அடைக்கப்பட்டிருந்தாா்.

சந்திரபாபு நாயுடுக்கு கண்புரை அறுவை சிகிச்சை அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி, அவருக்கு 4 வார கால இடைக்கால ஜாமீனை ஆந்திர உயா்நீதிமன்றம் வழங்கியிருந்தது. இந்நிலையில், அதை நிரந்தர ஜாமீனாக நீதிமன்றம் மாற்றியுள்ளது.

இதையடுத்து,  சந்திரபாபு நாயுடுக்கு உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதற்கு எதிா்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு மனு தாக்கல் செய்துள்ளது. 

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு தொடர்பாக பதிலளிக்க சந்திரபாபு நாயுடுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

மேலும், பொதுக் கூட்டங்கள், பேரணிகளில் பங்கேற்க சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இருப்பினும், நிலுவையில் உள்ள வழக்கு குறித்து அவர் பொதுவில் கருத்துகளை தெரிவிக்கவோ அல்லது ஊடகங்களில் பேசவோ கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →