இந்தியா

தெலங்கானா தேர்தல்: நவ.29, 30ல் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி ஹைதராபாத்தில் நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி ஹைதராபாத்தில் நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ஹைதராபாத் மாவட்ட ஆட்சியர் அனுதீப் துரிஷெட்டி கூறுகையில், 

தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30-ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 1-ம் தேதி வழக்கம்போல் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படும் என அவர் கூறியுள்ளார். 

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) 47.4 சதவீதத்தைப் பெற்று 119 இடங்களில் 88 இடங்களை வென்றது.

காங்கிரஸ் வெறும் 19 இடங்களைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது, அதே நேரத்தில் பாஜக ஒரு வெற்றிடத்தைப் பதிவு செய்தது. 

தெலங்கானா பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்படுவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

வரப்பெற்றோம் (15.09.2025)

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கனகாம்பரமும் தாவணியும்... ஸ்ரவந்தி சொக்கராபு!

SCROLL FOR NEXT