கோப்புப்படம் : ஏக்நாத் ஷிண்டே 
இந்தியா

மகாராஷ்டிர முதல்வர் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்து - முன்னாள் மேயர் கைது

மகாராஷ்டிர முதல்வர் ஷிண்டே குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை பேசியதாக எழுந்த புகாரில், உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா  தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

DIN

மும்பை : மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை பேசியதாக எழுந்த புகாரில், உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா கட்சியின் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஞாயிறன்று (நவ.26) மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய மும்பை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா கட்சியின் முக்கிய தலைவருமான தத்தா டால்வி, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குறித்த ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக புகார் எழுந்தது.

இந்த புகாரில் அடிப்படையில், ஐபிசி பிரிவுகள் 153 (ஏ), 153 (பி), 294 மற்றும் 504 ஆகிய பிரிவுகளின் கீழ், தத்தா டால்விக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதனைத் தொடர்ந்து, இன்று (நவ.29) டால்வியை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT