கோப்புப்படம் 
இந்தியா

கணவன் - மனைவி சண்டை: பாங்காக் விமானம் தில்லியில் அவசர தரையிறக்கம்

பாங்காக் சென்று கொண்டிருந்த விமானம் கணவன், மனைவி சண்டையால் தில்லி விமான நிலையத்தில் புதன்கிழமை அவசரமாக தரையிறக்கபட்டது.

DIN

தில்லி: பாங்காக் சென்று கொண்டிருந்த விமானம் கணவன், மனைவி சண்டையால் தில்லி விமான நிலையத்தில் புதன்கிழமை அவசரமாக தரையிறக்கபட்டது.

ஜெர்மனியின் முன்ச் நகரில் இருந்து தாய்லாந்தின் பாங்காக் நகருக்கு    லுஃப்தான்சா ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமான புதன்கிழமை சென்று கொண்டிருந்தது.

இந்த விமானத்தில் பயணித்த கணவன், மனைவி நடுவானில் திடீரென்று சண்டையிட்டுக் கொண்டதால் பரபரப்பான சூழல் நிலவியதை தொடர்ந்து, தில்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதுகுறித்து தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கணவன், மனைவியின் சண்டைக்கான காரணம் தெரியவில்லை. ஆனால், அவர்கள் சண்டையிட்டதால் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது.” என்று தெரிவித்தார்.

மேலும், முதலில் பாகிஸ்தானில்தான் தரையிறக்க அனுமதி கோரப்பட்டதாகவும், அனுமதி நிராகரிக்கப்பட்டதால் தில்லியில் தரையிறக்கப்பட்டு விமானத்தில் இருந்த ஆண் பயணி பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மீண்டும் பாங்காக் நோக்கி சிறிது தாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆா்.எஸ். மங்கலம் பட்டியலின மக்களுக்கு வழங்கிய நிலத்தை அபகரிப்பதைக் கண்டித்து மறியல்

ஏற்றுமதியாளா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை

தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

கானாடுகாத்தான் பகுதியில் நவ.7-இல் மின் தடை

ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்பவே எஸ்ஐஆா் விவகாரத்தை திமுக கையில் எடுத்துள்ளது: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

SCROLL FOR NEXT