தெலங்கானா பேரவைத் தேர்தலில் முதல்வர் சந்திரசேகர் ராவ் வாக்களித்தார். 
இந்தியா

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் வாக்களித்தார்

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், சித்திப்பேட்டை தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். 

DIN

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், சித்திப்பேட்டை தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். 

முதல்வா் சந்திரசேகா் ராவின் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) ஆளும் தெலங்கானாவில் 119 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று(வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

சந்திரசேகர் ராவின் மகள் கவிதா. 

நக்ஸல் பாதிப்பு மிகுந்த 13 தொகுதிகளில் மாலை 4 மணி வரையும், இதர தொகுதிகளில் மாலை 5 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தெலங்கானாவில் பிஆா்எஸ், காங்கிரஸ், பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது. 

மொத்தமாக 119 தொகுதிகளில் 2,290 வாக்காளா்கள் போட்டியிடுகின்றனர். 3.26 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். 

ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைஸி

இன்று காலை 11 மணி நிலவரப்படி, 20.64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி

இந்நிலையில் இன்று பிற்பகல், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், சித்திப்பேட்டை தொகுதியில் சிந்தமடகா வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அவரது மனைவி ஷோபாவும் அவருடன் வந்து வாக்களித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT