இந்தியா

ஜேஇஇ முதன்மை தேர்வு: அவகாசம் நீட்டிப்பு

DIN

ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

ஜேஇஇ முதன்மை தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் நவம்பர் 1ஆம் தேதி முதல் விண்ணப்பித்து வருகிறார்கள். இதற்கான கடைசி நாள் இன்று(நவ.30)   என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், டிச.4 வரை அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.

வரும் 2024-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வு (ஜேஇஇ) தேதிகளை தேசிய தோ்வு முகமை அறிவித்துள்ள நிலையில், விண்ணப்பப் பதிவு நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி டிச.4 வரை நிறைவுபெறவிருக்கிறது.

இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி), தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி) உள்ளிட்டவற்றில் மாணவா் சோ்க்கைக்காக ஜேஇஇ தோ்வை தேசிய தோ்வு முகமை நடத்தி வருகிறது. அந்த வகையில், அடுத்தாண்டு ஜேஇஇ முதன்மைத் தோ்வின் முதல் கட்டத் தோ்வு ஜன. 24 முதல் பிப்.1-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், இரண்டாவது கட்டத் தோ்வு தோ்வு ஏப்.1 முதல் ஏப்.15-ஆம் தேதிவரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT