மிக்ஜம் புயல்: வட தமிழகத்தில் டிச.3ல் புயலாக வலுப்பெறும்!
வட தமிழகத்தில் டிசம்பர் 3-ம் தேதி புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வட தமிழகத்தில் டிசம்பர் 3-ம் தேதி புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, தொடர்ந்து வலுவடைந்து தீவிர காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக அதே பகுதியில் நீடித்து வருகின்றது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும்.
அதன்பிறகு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 03.12.23ல் புயலாக வலுப்பெறக்கூடும். அதன்பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து 04.12.23 அதிகாலை வடதமிழகம்-தெற்கு ஆந்திர கடலோரப்பகுதியை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிதாக உருவாகியுள்ள புயலுக்கு மிக்ஜம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மிக்ஜம் புயல்