இந்தியா

மகாத்மா காந்தியின் வலிமையான கொள்கைகள் உலகுக்கு எப்போதும் பொருந்தும்: குடியரசுத் தலைவர்

 மகாத்மா காந்தியின் வலிமையான கொள்கைகள் எப்போதும் உலகிற்கு பொருத்தமானதாக இருக்கும் என குடியரத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

DIN

 மகாத்மா காந்தியின் வலிமையான கொள்கைகள் எப்போதும் உலகிற்கு பொருத்தமானதாக இருக்கும் என குடியரத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

மகாத்மா காந்தியின் உயர்வான கொள்களையும் அவர் கற்றுக் கொடுத்த பாடங்களையும் மக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மகாத்மா காந்தியின் உண்மை மற்றும் அகிம்சை இந்த உலகிற்கு புதிய பாதையைக் கொடுத்தது. தனது வாழ்நாளில் அகிம்சை முறையில் போராடியது மட்டுமல்லாது, சுகாதாரம், பெண்களுக்கு அதிகாரமளித்தல், தற்சார்பு, விவசாயிகளின் உரிமை, கல்வி, சமூக பாகுபாடு மற்றும் தீண்டாமை போன்றவைகளில் மக்களுக்கு ஆதரவாக போராடியுள்ளார். நாட்டு மக்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட அவர் உந்துசக்தியாக இருந்தார். அவரது அகிம்சை வழிப் போராட்டம் வரலாறு படைத்தது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது.

நாட்டு மக்களின் சார்பாக தேசப்பிதா மகாத்மா காந்திக்கு அவரது இந்த 154-வது பிறந்த நாளில் மரியாதை செலுத்துகிறேன். மகாத்மா காந்தியின் கொள்கைகளால் மார்டி லூதர் கிங், நெல்சன் மண்டேலா, பாரக் ஒபாமா மற்றும் பல அரசியல் தலைவர்கள் ஈர்க்கப்பட்டனர். மகாத்மா காந்தியின் வலிமையான கொள்கைகள் எப்போதும் உலகிற்கு பொருத்தமானதாக இருக்கும். இந்த பொன்னாளில் அவரது கொள்கைகளையும், அவர் கற்றுத் தந்த பாடங்களையும் பின்பற்றுவோம் என உறுதியெடுத்துக் கொள்வோம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

10 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

பெண்ணைத் தாக்கி மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

பைக் மீது லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு

திமுக ஆட்சியில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை: அக்ரி கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ

SCROLL FOR NEXT