இந்தியா

கேரளத்தில் மூன்று மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

DIN

கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, பத்தனம்திட்டா, ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அக்டோபர் 5ம் தேதி வரை மழை பெய்யும் என ஐஎம்டி கணித்துள்ளது.

மாநிலத்தில் கடந்த 3-4 நாள்களாக பரவலாக மழை பெய்து வருவதால், பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து, தண்ணீர் தேங்கியது மற்றும் சுவர்கள் இடிந்து விழும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இருப்பினும், மாநிலத்தில் இதுவரை எந்த இடத்திலும் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை.

கடந்த 24 மணி நேரத்தில், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் தலா இரண்டு முகாம்கள் திறக்கப்பட்டன.

கடந்த 24 மணி நேரத்தில் மழை தொடர்பான பல்வேறு சம்பவங்களில் மொத்தம் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஆலப்புழா மாவட்டத்தில் குட்டநாடு பகுதியில் உள்ள சிறிய குக்கிராமமான எடத்துவாவில் பெய்த கனமழையால் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

இடைவிடாது பெய்து வரும் மழையினால் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எத்தகைய சவால்களையும் எதிா்கொள்ளும் பெல் நிறுவனம் -பொறியியல் பிரிவு இயக்குநா் பெருமிதம்

86ஆம் ஆண்டில் திருச்சி அகில இந்திய வானொலி நிலையம் -தேடிவந்து ஆட்சியா் வாழ்த்து

விசாலீஸ்வரா் கோயிலில் பாண அரசரின் கல்வெட்டு!

மாநகராட்சி குறித்து பொய் தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை -ஆணையா் எச்சரிக்கை

திருச்சியில் இரவு, பகலாக கனமழை: 306 மி.மீ. பதிவு

SCROLL FOR NEXT