பொற்கோவிலில் பாத்திரம் கழுவிய ராகுல் காந்தி!
அமிர்தசரஸிலுள்ள பொற்கோவிலில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாத்திரங்கள் கழுவி சேவையாற்றினார்.
அமிர்தசரஸிலுள்ள பொற்கோவிலில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாத்திரங்கள் கழுவி சேவையாற்றினார்.
பஞ்சாபிலுள்ள அமிர்தசரஸ் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய ராகுல் காந்தி வருகை புரிந்தார். அங்கு வழிபாடு செய்த அவர், பக்தர்களுடன் சேர்ந்து பாத்திரங்களைக் கழுவி கோயில் சேவையில் ஈடுபட்டார்.
இது தொடர்பாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர், ராகுல் காந்தி தனிப்பட்ட காரணங்களுக்காக அமிர்தசரஸ் கோயிலுக்கு வருகை புரிந்துள்ளார். இது தனிப்பட்ட முறையில் அவர் மேற்கொண்டுள்ள ஆன்மிக பயணம். அதற்கு மரியாதை அளிக்கும் வகையில் காங்கிரஸ் தொண்டர்கள் அவரை சந்திப்பதைத் தவிர்க்க வேண்டும். ராகுல் காந்தியின் மீதான அன்பை அடுத்தமுறை அவரின் வருகையின்போது வெளிப்படுத்துவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
பஞ்சாப் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுக்பால் சிங் கைரா போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முதல்முறையாக ராகுல் காந்தி பஞ்சாப் மாநிலத்துக்கு வருகைபுரிந்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.