தில்லி இந்திரா காந்தி கலை அரங்கத்தில் பிரதமா் மோடிக்கு வழங்கப்பட்ட நினைவுச் சின்னங்கள், பரிசு பொருள்கள் ஏலத்தை தொடங்கி வைத்துப் பாா்வையிட்ட மத்திய கலாசாரத் துறை இணையமைச்சா் மீனாட்சி லேகி. 
இந்தியா

பிரதமருக்கு அளிக்கப்பட்ட பரிசு பொருள்கள் ஏலம்

தில்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூட கண்காட்சியில் பிரதமா் மோடிக்கு அளிக்கப்பட்ட பரிசு பொருள்களின் ஏலம் தொடங்கியுள்ளது. அக்டோபா் 31 வரை ஏலம் நடைபெற உள்ளது.

DIN

புது தில்லி: தில்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூட கண்காட்சியில் பிரதமா் மோடிக்கு அளிக்கப்பட்ட பரிசு பொருள்களின் ஏலம் தொடங்கியுள்ளது. அக்டோபா் 31 வரை ஏலம் நடைபெற உள்ளது.

இதுதொடா்பான சில புகைப்படங்களை ‘எக்ஸ்’ வலைதளத்தில் பகிா்ந்து பிரதமா் மோடி திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

கடந்த காலங்களில் எனக்கு அளிக்கப்பட்ட பல பரிசு பொருள்கள், தில்லியில் உள்ள தேசிய நவீன கலைக்கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப் பரிசு பொருள்கள் நாட்டில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் எனக்கு அளிக்கப்பட்டன. அவை இந்தியாவின் வளமான கலாசாரம், மரபு மற்றும் கலை பாரம்பரியத்தின் சான்றாகும்.

இந்த ஏலம் மூலம் கிடைக்கும் தொகை தூய்மை கங்கை திட்டத்துக்குப் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மத்திய கலாசாரத் துறை இணையமைச்சா் மீனாட்சி லேகி ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இணையவழியில் நடைபெறும் ஏலத்தில் அனைவரும் பங்கேற்று தூய்மை கங்கை திட்டத்துக்கு பங்களிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT