முகப்பு
இந்தியா

யார் இந்த நூரி? சோனியாவுக்கு அறிமுகம் செய்த ராகுல் காந்தி

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது தாய் சோனியா காந்திக்கு அன்பு பரிசு வழங்கியுள்ளார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:05 AM
பகிர்:

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது தாய் சோனியா காந்திக்கு அன்பு பரிசு வழங்கியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்தாண்டு மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை தொடர்ந்து, தற்போது நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அவ்வப்போது ஓட்டுநர்கள், உணவு விநியோகிக்கும் ஊழியர்கள், விவசாயிகள், சுமை தூக்கும் தொழிலாளிகள், வியாபாரிகள் எனப் பல்வேறு தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.

கடந்த இரு நாள்களாக பஞ்சாபில் உள்ள பொற்கோயிலில் பக்தர்கள் பயன்படுத்திய பாத்திரம் கழுவுதல், சமையலுக்கு உதவி செய்தல் போன்ற சேவைகளை செய்தார்.

இதற்கிடையே, தனது தாய் சோனியா காந்தியுடனும் அவ்வப்போது ராகுல் காந்தி நேரம் செலவழித்து வருகிறார். இந்த நிலையில், சோனியாவுக்கு நாய் குட்டி ஒன்றை ராகுல் காந்தி பரிசளித்துள்ளார்.

சர்வதேச விலங்குகள் தினத்தை முன்னிட்டு இந்த காணொலியை காங்கிரஸ் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குடும்பத்தின் புதிய உறுப்பினரான நூரியை தனது தாய்க்கு ராகுல் காந்தி அறிமுகப்படுத்துகிறார் என்று பதிவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் கோவா பயணம் மேற்கொண்ட போது அங்கிருந்து தனது தாய்க்காக ராகுல் காந்தி நாய் குட்டியை வாங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →