புதுதில்லி: இந்தியாவில் ஒரே நாளில் 39 புதிய கரோனா வைரஸ் நோய்த்தொற்று அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் ஆக்டிவ் கேஸ்கள் 363ஆக பதிவாகியுள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் இதுவரை புதிதாக 2 பேருக்கு கரோனா வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில், 10 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் எந்த மாநிலத்திலும் யாரும் உயிரிழக்காத நிலையில், இந்தியாவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,32,034 ஆக உள்ளது.
நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை இதுவரை 4,44,66,846ஆக உள்ளதாக சுகாதார துறை அமைச்சக்கத்தின் வலைத்தளம் தெரிவித்துள்ள நிலையில் இறப்பு விகிதம் 1.18 சதவீதமாக உள்ளது. இதுவரை 220.67 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.