இந்தியா

இஸ்ரேல் - பாலஸ்தீனம் மோதல் பகுதியில் சிக்கித் தவித்த 27 இந்தியர்கள் மீட்பு!

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு மோதல் பகுதியில் சிக்கித் தவித்த 27 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மேகாலயா முதல்வர் கான்ராட் கே. சங்மா தெரிவித்துள்ளார். 

DIN


மேகாலயா: இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு மோதல் பகுதியில் சிக்கித் தவித்த 27 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மேகாலயா முதல்வர் கான்ராட் கே. சங்மா தெரிவித்துள்ளார். 

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஆளும் ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது சனிக்கிழமை ராக்கெட்டுகளை வீசியும், எல்லை தாண்டியும் திடீா் தாக்குதல் நடத்தினா். இதில், 350-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியா்கள் உயிரிழந்தனா். 1,900-க்கும் மேற்பட்டோா் படுகாயம் அடைந்தனா்.

இதனால் அதிா்ச்சி அடைந்த இஸ்ரேல், போா்ப் பிரகடனம் அறிவித்து நடத்திய பதிலடி தாக்குதலில் காஸா பகுதியில் 300-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 1,600-க்கும் மேற்பட்டோா் பலத்த காயம் அடைந்ததாகவும்,  இரு தரப்பிலிருந்தும் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். 

நீண்ட காலமாக நடைபெற்று வரும் இஸ்ரேல் - காஸா சண்டையில் இது மோசமான தாக்குதலாகக் கருதப்படுகிறது. 

இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலில் உள்ள 18,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியது.

தேவையற்ற பயனத்தை தவிா்க்க வேண்டும். தேவைப்பட்டால் பாதுகாப்பு மையங்களுக்குச் செல்ல வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் சிக்கியிருந்த இந்தியர்களில் 27  பேர் மீட்கப்பட்டுள்ளதாக மேகாலயா முதல்வர் கான்ராட் கே. சங்மா தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பதாது: 
சமீபத்திய தகவல்களின்படி, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய தூதரகத்தின் முயற்சியால், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் மோதல் பகுதியில் சிக்கித் தவித்த மேகாலயாவைச் சேர்ந்த 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 

மீட்கப்பட்ட 27 பேரும் பாதுகாப்பாக எகிப்து எல்லையை கடந்துள்ளதாக  முதல்வர் சங்மா தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார ராசிபலன்! | Sep 07 முதல் 13 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கூலி படத்தின் சிக்கிடு விடியோ பாடல்!

கடலூர் சிப்காட் ஆலையில் ரசாயன கசிவு! 40 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓணம் அல்டிமேட்... ஐஸ்வர்யா தேவன்!

ஓணம் சேச்சி... சாதிகா!

SCROLL FOR NEXT