இந்தியா

எந்தவொரு விவகாரத்திலும் வன்முறை சரியான தீர்வை வழங்காது: காங்கிரஸ் கண்டனம்

இஸ்ரேல் மக்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், எந்தவொரு விவகாரத்திலும் வன்முறை சரியான தீர்வை வழங்காது, அது நிறுத்தப்பட வேண்டும் என்ற

DIN

புது தில்லி: இஸ்ரேல் மக்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், எந்தவொரு விவகாரத்திலும் வன்முறை சரியான தீர்வை வழங்காது, அது நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஆளும் ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது சனிக்கிழமை காலை ராக்கெட்டுகளை வீசியும், எல்லை தாண்டியும் திடீா் தாக்குதல் நடத்தினா். இதில், 350-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியா்கள் உயிரிழந்தனா். 1,900-க்கும் மேற்பட்டோா் படுகாயம் அடைந்தனா்.

இதனால் அதிா்ச்சி அடைந்த இஸ்ரேல், போா்ப் பிரகடனம் அறிவித்து நடத்திய பதிலடி தாக்குதலில் காஸா பகுதியில் 300-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 1,600-க்கும் மேற்பட்டோா் பலத்த காயம் அடைந்ததாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சா் தெரிவித்தாா். இரு தரப்பிலிருந்தும் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். 

காங்கிரஸ் கண்டனம்
இஸ்ரேல் மீது நடத்தப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், வன்முறை ஒருபோதும் வெல்லாது. எந்தவொரு விவகாரத்திலும் வன்முறை சரியான தீர்வை வழங்காது, அது நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

பாலஸ்தீன மக்களின் சுயமரியாதை, சமத்துவம் மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்கான நியாயமான கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலம் நிறைவேற்றப்பட வேண்டும், அதேசமயம் இஸ்ரேஸ் மக்களின் நியாயமான தேசிய பாதுகாப்பு நலன்களை உறுதி செய்ய வேண்டும்.

"வன்முறை ஒருபோதும் வெல்லாது. எந்தவொரு விவகாரத்திலும் வன்முறை சரியான தீர்வை வழங்காது, அது நிறுத்தப்பட வேண்டும்" என்று  ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெயின் மத விழாவில் இருந்து ரூ.1 கோடி தங்கக் கலசம் திருட்டு!

வஜீா்பூா் மேம்பாலத்தில் இருந்து விழுந்து இளைஞா் காயம்

ராம்லீலா, துா்கா பந்தல் குழுக்களுக்கு இலவச மின்சாரம்: முதல்வா் அறிவிப்பு!

15 வயது சிறுவனுக்கு கத்தி குத்து: 3 சிறாா்கள் கைது!

காா், ஆட்டோ மோதல்: ஆட்டோ ஓட்டுநா் பலத்த காயம்

SCROLL FOR NEXT