இந்தியா

ஆசிய விளையாட்டுப் போட்டி:  இந்திய விளையாட்டு வீரர்களுக்கு மோடி பாராட்டு

கடந்த 60 ஆண்டுகளில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 107 பதக்கங்களை வென்ற இந்திய விளையாட்டு வீரர்களின்  ஆகச் சிறந்த செயல்திறனுக்குப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 

DIN


புதுதில்லி: கடந்த 60 ஆண்டுகளில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 107 பதக்கங்களை வென்ற இந்திய விளையாட்டு வீரர்களின்  ஆகச் சிறந்த செயல்திறனுக்குப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது: 

“ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு ஒரு வரலாற்றுச் சாதனை!

கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 107 பதக்கங்களை வென்றதில் ஒட்டுமொத்த நாடும் மகிழ்ச்சியில் உள்ளது. 

நமது வீரர்களின் அசைக்க முடியாத உறுதியும், இடைவிடாத உத்வேகம் மற்றும் கடின உழைப்பும் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. 

அவர்களது வெற்றிகள், நாம்  நினைவில் கொள்ள வேண்டிய தருணங்களையும், நம் அனைவருக்கும் உத்வேகத்தையும் அளித்துள்ளதுடன், மேலும் சிறந்த செயல்பாட்டிற்கான நமது உறுதிப்பாட்டையும்  மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன என்று மோடி தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திற்பரப்பு அருவியில் குளிக்க 4 வது நாளாகத் தடை!

இன்று உருவாகிறது சென்யார் புயல்!

ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

SCROLL FOR NEXT