இந்தியா

தில்லியில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது!

தில்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று(திங்கள்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

DIN

தில்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று(திங்கள்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, அக்கட்சியின் முன்னாள் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தலைமை நிர்வாகிகள், காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களின் முதல்வா்கள், கட்சியின் மூத்த தலைவா்கள் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

காங்கிரஸ் செயற்குழுவில் 39 உறுப்பினா்கள், 32 நிரந்தர அழைப்பாளா்கள், 13 சிறப்பு அழைப்பாளா்கள் இடம்பெற்றுள்ளனர். 

அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் வரும் நவம்பர் - டிசம்பரம் மாதங்களில் நடைபெறவுள்ள ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், தெலங்கானா, மிஸோரம் சட்டப்பேரவைத் தோ்தல் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இனி அதிமுக அல்ல, எதிமுக! - TTV Dhinakaran

750 தாமரைகள் கொண்ட மணல் சிற்பம்: பிரதமர் மோடிக்கு பட்நாயக் வாழ்த்து!

Jailer 2 ரிலீஸ் குறித்து Rajinikanth!

மெட்ராஸ் ஐஐடி-ல் புராஜெக்ட் அசோசியேட் பணி

மோடியின் தாயார் ஏஐ விடியோ: உடனே நீக்க காங்கிரஸுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு!

SCROLL FOR NEXT