60 ஆயிரம் கோடி ரூபாய் போன்சி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் வெளிநாடு செல்வதற்கு தில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹெர்மண்ட் பாட்டீல் என்பவர் அவருடைய மகளின் மேல்படிப்பு தொடர்பாக ஸ்விட்சர்லாந்து செல்வதற்கு தில்லி நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
அக்டோபர் 14 முதல் 22 வரை அவருக்கு அனுமதி அளித்து சிறப்பு நீதிபதி ராஜேஷ் குமார் கோயல் உத்தரவிட்டுள்ளார். விசாரணையின்போது தலைமறைவாகவோ அல்லது நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்க்கவோ பாட்டீல் முயலவில்லை என்பதைக் கருத்தில்கொண்டு நீதிமன்றம் அவருக்கு அனுமதி வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: அரசியல் வியாபாரம்! குஜராத் பாஜக எம்.பி.யின் சர்ச்சைப் பேச்சு!
முன்னதாக, இந்த வழக்கு தீவிரமான பொருளாதார குற்றத் தன்மை உடையது எனவும், குற்றம் சாட்டப்பட்டவரை வெளிநாடு செல்ல அனுமதித்தால் விசாரணை பாதிக்கும் எனவும் கூறி பாட்டீலின் மனுவிற்கு அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.