ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை வெளியிட்ட வந்தேபாரத் ரயிலின் ‘புஷ்- புல் லோகோ’ புகைப்படம். 
இந்தியா

தயாராகி வரும் எளிய மக்களுக்கான வந்தே பாரத் ரயில்

எளிய மக்களுக்காக இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயிலின் லோகோ தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

DIN

எளிய மக்களுக்காக இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயிலின் லோகோ தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

நாட்டின் அதிவேக ரயிலாக வந்தே பாரத் இயக்கப்பட்டு வரும் நிலையில் அதன் கட்டணம் ஏழை எளிய மக்கள் பயணிப்பதற்கு ஏற்ற வகையில் இல்லை. இந்நிலையில் அந்தத்தரப்பு மக்களும் அதிவேக ரயிலில் பயணிக்கும் வகையில் ’புஷ் புல்’ எனும் ரயிலை இயக்க ரயில்வே நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

இம்மாத இறுதிக்குள் இந்த ரயில்சேவை தொடங்கப்படும்.   ‘எல்எச்பி’ பெட்டிகளுடன் இருபுறமும் மின்சார இன்ஜின் கொண்டு இயங்கும். இதற்கான பெட்டிகள் பெரம்பூா் ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பிரத்யேக லோகோ தயாரிக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கான இன்ஜின் மேற்கு வங்க மாநிலத்தில் சித்தரஞ்சன் ‘லோகோமோட்டிவ் ஒா்க்ஸ்’ ஆலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் சமூக வலைதளத்தில்

வெளியிட்டுள்ள பதிவில்,  ‘புஷ் புல்’ ரயிலுக்கான லோகோ தயாரிக்கப்பட்டு வருகிறது. ரயிலின் இரு முனைகளிலும் இந்த புஷ் புல் லோகோ இணைக்கப்பட்டவுடன் அதிக அளவிலான , பவா் ஜெனரேட்டா் போன்றவை தேவைப்படாது எனப் பதிவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூரில் பரவலாக மழை

தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம்

’வன்னியா் சங்க கட்டடம் இப்போதுள்ள நிலையே தொடரலாம்’: உச்சநீதிமன்றம் உத்தரவு

பூட்டிய வீட்டில் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு

அரசுப் பேருந்து சேதம்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT