முகப்பு
இந்தியா

ஆசிரியர்களுக்கு ஸ்கூட்டி வழங்க அசாம் அரசு திட்டம்

தொலைதூரப் பகுதிகளில் இருந்து வரும் ஆசிரியர்களுக்கு ஸ்கூட்டி வழங்க ஆலோசித்து வருவதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.  

Updated On : 13 அக்டோபர், 2023 at 7:09 PM
பகிர்:

தொலைதூரப் பகுதிகளில் இருந்து வரும் ஆசிரியர்களுக்கு ஸ்கூட்டி வழங்க ஆலோசித்து வருவதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். 

தேஜ்பூரில் 9ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியதாவது, மாநிலத்தில் தொலைதூரப் பகுதிகளில் சில பள்ளிகள் உள்ளன. இதனால் அந்த ஆசிரியர்கள் தாமதமாக பள்ளிக்கு வர நேரிடுகிறது. எனவே அத்தகைய 50 ஆயிரம் ஆசியர்களுக்கு ஸ்கூட்டிகள் வழங்க உள்ளோம். இதன்மூலம் அவர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வர முடியும். 

அடுத்த இரண்டு ஆண்டுகளில் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மிதிவண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இது உயர்நிலைப் பள்ளிக்கு மாணவர்கள் எளிதாகச் சென்று வர உதவும். எங்கள் அரசிற்கு முக்கியமானது என்னவென்றால், ஆசிரியர்கள் சரியான நேரத்தில் சென்றடைவதோடு மட்டுமல்லாமல் மாணவர்களும் ஒரு நிமிடம் கூட கற்றலை இழக்காமல் இருக்க வேண்டும். 

Advertisement

எந்தெந்த பகுதிகளில் எளிதாக பயணிக்க சாலைகள் மற்றும் பாலங்கள் தேவை என்பதை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும். மாநிலத்தின் பசுமையை அதிகரிக்க மாணவர்கள் தலா ஒரு மரக்கன்றுகளையாவது நட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.