புதுதில்லி: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் மனோகர் சிங் கில்(86) உடல்நலக்குறைவு காரணமாக தெற்கு தில்லி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
எம்.எஸ். கில்லின் இறுதிச் சடங்குகள் திங்கள்கிழமை(அக்.16) பிற்பகல் 3 மணிக்கு லோடி சாலை மயானத்தில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் அதிகாரியான கில், சிரோமணி அகாலிதளம் தலைவர் பஞ்சாப் முதல்வராக இருந்தபோது பிரகாஷ் சிங் பாதலின் கீழ் பணியாற்றினார்.
டிசம்பர் 1996 முதல் ஜூன் 2001 வரை இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றினார். டி.என்.சேஷன் தலைவராக இருந்தபோது கில் மற்றும் ஜி.வி.ஜி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
ஓய்வுக்குப் பிறகு, அரசியலில் இணைந்த முதல் முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி எம்.எஸ்.கில் தான்.
காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினராக நாடாளுமன்றத்துக்கு சென்ற எம்.எஸ்.கில், 2008 ஆம் ஆண்டில் காங்கிரஸ் அரசாங்கத்தின் கீழ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராகவும், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
கில்லுக்கு மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.