இந்தியா

சொமேட்டோ ஊழியரா? மாடல் அழகியா? வைரலாகும் இளம்பெண்! (விடியோ)

இளம்பெண் ஒருவர், சொமேட்டோ உடை அணிந்தவாறு விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தில் உணவு விநியோகம் செய்வதைப்போன்ற விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

DIN


இளம்பெண் ஒருவர், சொமேட்டோ உடை அணிந்தவாறு விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தில் உணவு விநியோகம் செய்வதைப்போன்ற விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

பயனர்களுக்கு உணவு விநியோகம் செய்யும் சேவையை சொமேட்டோ நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பலர் தங்களை இணைத்துக்கொண்டு உணவு விநியோகம் செய்து அதன்மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர்.

அவர்களில் பெரும்பாலானோர் அன்றாட தேவைகளுக்காக உழைப்பவர்கள்தான். அவர்களில் பலர் உணவு இன்றி, உறக்கம் இன்றி - சிலர் பகுதிநேர வேலையாகவும் செய்து வருகின்றனர். அத்தகையோரை விடியோக்களிலும் பார்த்ததுண்டு.

இதனிடையே சொமேட்டோ உடை அணிந்தவாறு, விலையுயர்ந்த அதிநவீன இரு சக்கர வாகனத்தில் இளம் பெண் ஒருவர் உணவு விநியோகம் செய்வதைப்போன்ற விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

பார்ப்பதற்கு மாடல் அழகி போன்று இருப்பதால் பலரும் இந்த விடியோ குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். ஹெல்மெட் அணியாமல், கூலிங் கிளாஸ் அணிந்திருக்கும் அந்த இளம்பெண் உண்மையில் சொமேட்டோ நிறுவனத்தில் பணிபுரிகிறாரா? சொமேட்டோ நிறுவனத்தின் வியாபார யுக்தியா? விளம்பர தேடலா? என பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

இந்த விடியோவில் உள்ள இடங்களை வைத்து, இந்த இடம் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் பகுதி எனத் தெரிகிறது. ஆனால், இளம்பெண் உண்மையில் அந்நிறுவனத்தில் பணிபுரிகிறாரா? என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.

பயனர்களைச் சென்றடையும் விளம்பர யுக்தியாகவும் சொமேட்டோ நிறுவனம் இதனைச் செய்திருக்கலாம். மாடல் அழகியை விளம்பரதூதுவராக நியமித்து, காலையில் ஒரு மணிநேரமும், மாலையில் ஒரு மணி நேரமும் இருசக்கவர வாகனத்தில் வெறும் பையுடன் சொமேட்டோ உடை அணிந்தவாறு வலம் வர வைத்திருக்கலாம் என அந்த விடியோ பகிரப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT