உ.பி.யில் 180 கிமீ வேகத்தில் செல்லும் அதிவிரைவு ரயில் சேவை தொடக்கம்!
உத்தர பிரதேசத்தில் ஷாஹிபாபாத் - துஹாய் டிபோட் இடையிலான முதல் அதிவேக ரயிலை(ஆர்ஆர்டிஎஸ்) பிரதமர் நரேந்திர மோடி இன்று(வெள்ளிக்கிழமை) கொடியசைத்துத் தொடக்கிவைத்தார்.
இந்தியாஉ.பி.யில் 180 கிமீ வேகத்தில் செல்லும் அதிவிரைவு ரயில் சேவை தொடக்கம்!
உத்தர பிரதேசத்தில் ஷாஹிபாபாத் - துஹாய் டிபோட் இடையிலான முதல் அதிவேக ரயிலை(ஆர்ஆர்டிஎஸ்) பிரதமர் நரேந்திர மோடி இன்று(வெள்ளிக்கிழமை) கொடியசைத்துத் தொடக்கிவைத்தார்.
உத்தர பிரதேசத்தில் ஷாஹிபாபாத் - துஹாய் டிபோட் இடையிலான முதல் அதிவேக ரயிலை(ஆர்ஆர்டிஎஸ்) பிரதமர் நரேந்திர மோடி இன்று(வெள்ளிக்கிழமை) கொடியசைத்துத் தொடக்கிவைத்தார்.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அதிகாரிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.
மாநில நகரங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்தை நவீனமயப்படுத்த இந்த அதிவிரைவு ரயிலுக்கு 'நமோ பாரத்’ என பெயரிடப்பட்டுள்ளது.
ஷாஹிபாபாத் என்பது தில்லி, நொய்டா எல்லையில் உள்ள பகுதி என்பதால் மக்களுக்கு மிகவும் பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷாஹிபாபாத் - துஹாய் இடையே 17 கி.மீ. தொலைவு வழித்தடத்தில் ஷாஹிபாபாத், காஜியாபாத், குல்தாா், துஹாய், துஹாய் டிபோட் ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன. உலகத் தரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த ரயில் நிலையங்களில் 15 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும். பயணிகளின் வருகைக்கு ஏற்ப 5 நிமிட இடைவெளியில் ஒரு ரயிலை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக இந்த ரயில்கள் 180 கி.மீ. வேகத்தில் செல்லும். முதல்கட்டமாக ரூ.30,000 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை பானிபட் வரையில் நீட்டிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.