இந்தியா

பாலஸ்தீனத்துக்கு ஆதரவானது காந்தியின் நிலைப்பாடு: ஓவைசி

DIN

இந்தியாவின் தந்தையான காந்தியின் நிலைப்பாடு பாலஸ்தீனத்துக்கு ஆதரவானதாகவே இருந்ததாக மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். 

பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையிலான போர் தொடர்பாக பேசிய ஓவைசி, இந்திய மக்களுக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இங்கிலாந்து எப்படி ஆங்கிலேயர்களுக்கானதோ, பிரான்ஸு எப்படி பிரெஞ்சுக்காரர்களுக்கானதோ அதேபோன்றுதான் பாலஸ்தீனம் அரேபியர்களுக்கானது எனக் குறிப்பிட்டார். போரிலிருந்து விடுபட்டு பாலஸ்தீன மக்கள் அமைதியான சுதந்திரம் பெற வேண்டும் எனக் குறிப்பிட்டார். 

பாலஸ்தீன ஆதரவு பெற்ற ஹமாஸ் - இஸ்ரேல் படைகளுக்கு இடையிலான போர் 15வது நாளான தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற போரில் இஸ்ரேல் தாக்குதலால் 3,478 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 12,065 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். 

இதேபோன்று ஹமாஸ் படையினரின் தாக்குதலால், இஸ்ரேலில் 1,400 பேர் பலியானதாகவும், 3,800க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவால் 200 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது -சசி தரூர் கணிப்பு

முத்திரைக் கட்டணத்தை உயர்த்தியுள்ள திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

‘ஸ்டார்’ சுரபி! அதிதி போஹன்கர்...

கொல்கத்தாவின் வெற்றிக்கான தாரக மந்திரத்தைப் பகிர்ந்த நிதீஷ் ராணா!

மஹிக்காக.. ஜான்வி கபூர்!

SCROLL FOR NEXT