இந்தியா

பாஜகவுக்கு எதிராக பாஜக குடும்பத்தாரை களமிறக்கும் காங்கிரஸ்!

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கோட்டையாக திகழும் தொகுதிகளில் பாஜகவுக்கு எதிராக பாஜக குடும்பத்தைச் சேர்ந்தவர்களையே காங்கிரஸ் களமிறக்கியுள்ளது. 

இணையதளச் செய்திப் பிரிவு


மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கோட்டையாக திகழும் தொகுதிகளில் பாஜகவுக்கு எதிராக பாஜக குடும்பத்தைச் சேர்ந்தவர்களையே காங்கிரஸ் களமிறக்கியுள்ளது. 

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸால் வெல்ல முடியாத இரண்டு தொகுதிகளில் பிரித்து ஆளும் கொள்கையை தந்திரமாகப் பயன்படுத்திய காங்கிரஸ், அத்தொகுதிகளில் பாஜக சார்பில் வென்றவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாக முன்னிறுத்தியுள்ளது.

230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்திற்கு நவம்பர் 17ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல்கட்டமாக 144 வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து 4 நாள்கள் கழித்து இரண்டாவது கட்டமாக 88 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

அதில், பாஜக முன்னாள் தலைவர்கள் 5 பேர் இடம்பெற்றுள்ளனர். அதில், பாஜக முன்னாள் எம்.எல்.ஏ.க்களான கிரிஜா சங்கர் ஷர்மா, பன்வர் சிங், ஷெகாவத் மற்றும் அபய் மிஸ்ரா ஆகியோரும் அடக்கம். 

காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடியாத விந்த்யா மற்றும் புந்தேல்கண்ட் ஆகிய தொகுதிகளில் பாஜக மாறி மாறி ஆட்சியமைத்துள்ளது. இந்தத் தொகுதிகளில் இம்முறை பாஜக குடும்பத்தைச் சேர்ந்தவர்களையே காங்கிரஸ் வேட்பாளர்களாக முன்னிறுத்தியுள்ளது. மேலும் புதிதாக பிரித்து உருவாக்கப்பட்ட மவுகஞ்ச் மாவட்டத்தின் தியோதலாப் தொகுதியிலும் பத்மேஷ் கெளதம் என்பவரை காங்கிரஸ் நிறுத்தியுள்ளது. இவர் மூன்று முறை எம்.எல்.ஏ.வான பாஜகவைச் சேர்ந்த கிரிஷ் கெளதமின் உறவினர். 

உள்ளாட்சித் தேர்தலில் பத்மேஷ் கெளதம் தனது உறவினரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பதால் காங்கிரஸ் அவரைத் தேர்வு செய்துள்ளது. 

புந்தேல்கண்ட் சாகர் மாவட்டத்தில் மூன்று முறை பாஜக மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அங்கும் இதே சூழ்ச்சியை காங்கிரஸ் கையாண்டுள்ளது. அந்தத் தொகுதியில் மூன்று முறை எல்.எல்.ஏ.வான சைலேந்தர் ஜெயின். அவருக்கு எதிராக அவரின் மருமகளான நிதி ஜெயினை (தம்பி மனைவி) காங்கிரஸ் நிறுத்தியுள்ளது. 

கடந்த முறை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் நிதி ஜெயின் தோல்வி அடைந்திருந்தாலும், 58,000 வாக்குகளைப் பெற்றார். அதனால், காங்கிரஸ் கட்சி நிதி ஜெயினை முன்னிறுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்ட் இயற்கை பேரிடர்: 10 ஆண்டுகளில் 3,500 பேர் பலி

“காஸாவில் எப்போது சண்டையை நிறுத்துவீர்கள்?” -இஸ்ரேலில் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

ஆஸி.யை முதல்முறையாக ஆல் அவுட் செய்த தெ.ஆ.: சதமடிக்க தவறிய டிம் டேவிட், ஆஸி. 178 ரன்கள்!

புதிய சிம் கார்ட் வாங்கியவருக்கு கிரிக்கெட் வீரரின் பழைய மொபைல் எண் ஒதுக்கப்பட்டதால் குழப்பம்

இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத சிலர்! டிரம்ப்புக்கு மத்திய அமைச்சர் பதிலடி?

SCROLL FOR NEXT