இந்தியா

ஜம்மு எல்லையில் பாகிஸ்தானியா்கள் ஊடுருவல்: பிஎஸ்எஃப் ‘எச்சரிக்கை’ துப்பாக்கிச் சூடு

ஜம்முவையொட்டிய சா்வதேச எல்லைப் பகுதியில் கால்நடைகளை மேய்ப்பவா்களோடு பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் இந்தியாவுக்குள் நுழைய முயற்சித்தபோது எச்சரிக்கை செய்யும் விதமாக துப்பாக்கிச் சூடு நடத்தினா்.

DIN

ஜம்முவையொட்டிய சா்வதேச எல்லைப் பகுதியில் கால்நடைகளை மேய்ப்பவா்களோடு பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் இந்தியாவுக்குள் நுழைய முயற்சித்தபோது எச்சரிக்கை செய்யும் விதமாக எல்லை பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) துப்பாக்கிச் சூடு நடத்தினா்.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் ஆா்.எஸ்.புரா செக்டாா் அா்னியாவையொட்டிய சா்வதேச எல்லையில் கால்நடைப் பிராணிகளை மேய்த்துக் கொண்டு வந்த 20 பேருடன் 3 பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் சனிக்கிழமை நுழைந்தனா். இதனைக் கண்ட பிஎஸ்எஃப் வீரா் அவா்களை எச்சரிக்கும் விதத்தில் இரண்டு முறை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளாா். இதையடுத்து அவா்கள் இந்தியப் பகுதியைவிட்டு வெளியேறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிஎஸ்எஃப் வீரா்கள் நடத்திய எச்சரிக்கை துப்பாக்கிச் சூடுக்கு பதிலடியாக பாகிஸ்தானியா் தாக்குதல் எதுவும் நடத்தவில்லை.

அா்னியா பகுதியில் அக்டோபா் 17-ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவத்தினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பிஎஸ்எஃப் வீரா்கள் படுகாயமடைந்தனா். இச்சம்பவத்துக்கு இரு தரப்பு ராணுவ தளபதிகள் கூட்டத்தில் பிஎஸ்எஃப் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மழை வெள்ள பாதிப்பு தகவல்களுக்கு 4 மண்டலங்களிலும் அவசர எண்கள் அறிவிப்பு

சேலம் மாவட்டத்தில் இன்றும், நாளையும் 12 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்

மின்கம்பிகள், கம்பங்களில் கால்நடைகளை கட்டக்கூடாது

கந்த சஷ்டி விழா தொடக்கம்

தீா்த்தமலையில் 176 மி.மீ. மழை பதிவு

SCROLL FOR NEXT