கோப்புப்படம் 
இந்தியா

ராஜஸ்தான்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்!

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலைக் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. 

DIN


ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலைக் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. 

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ள 33 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. 

முதல்வர் அசோக் கெலாட் சர்தார்புராவிலும், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் டோங்க் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். 

பேரவைத் தலைவர் சி.பி.ஜோஷி நாத்வாரா சட்டமன்றத் தொகுதியிலும், கட்சியின் மாநிலத் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா லச்மன்கர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

அமைச்சர் ஹரிஷ் சௌத்ரி பேட்டூ தொகுதியிலும், மம்தா பூபேஷ் சிக்ராய்-எஸ்சி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

அதிக இடங்களுக்கான பெயர்களை இறுதி செய்வதற்காக மத்திய தேர்தல் குழு ஞாயிற்றுக்கிழமை கூடும் என்பதால், காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களில் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

200 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு நவம்பர் 25-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெட்டபாலிக் சின்ட்ரோம் என்பது என்ன? இது ஆண்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன

இஸ்ரேல் பிரதமருடன் இந்தியத் தூதர், பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

இந்த வார ஓடிடி படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஆக. 12-ல் தே.ஜ.கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் அறிவிக்க வாய்ப்பு!

SCROLL FOR NEXT