முகப்பு
இந்தியா

ஹிசார் பகுதியில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!

சத்ரோட் ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலின் இரண்டு சக்கரங்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் ரயில் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:14 AM
கோப்புப் படம்
பகிர்:

ஹிசார்: ஹரியாணா மாநிலம் சத்ரோட் ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலின் இரண்டு சக்கரங்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் ரயில் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

பிகானேர் கோட்டத்தின் கீழ் உள்ள ரேவாரி-ஹிசார் ரயில் பாதையில் ஹன்சி-ஹிசார் ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயிலின் இரு சக்கரங்கள் தடம் புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிகானேர் கோட்ட வணிக மேலாளர் மகேஷ் தவேலியா கூறுகையில் சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இந்த பாதையில் போக்குவரத்து மீட்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.

சரக்கு ரயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் தில்லி-பதிண்டா இடையே இயக்கப்பட்ட கிசான் எக்ஸ்பிரஸ் ரயில் ஹன்சி நிலையத்தில் நிறுத்தப்பட்டு பிறகு புறப்பட்டு சென்றது.

முழு கட்டுரையைப் படிக்க →