இந்தியா

ஆந்திர ரயில் விபத்தில் பலி 14 ஆக உயர்வு! 50 பேர் காயம்

ஆந்திரத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் இரண்டு ரயில்கள் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. 

DIN

ஆந்திரத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் இரண்டு ரயில்கள் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. 

விஜயநகரம் மாவட்டத்தின் கன்கடபள்ளி பகுதியில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை விசாகப்பட்டினம்-ராயகடா இடையிலான பயணிகள் ரயில் மீது விசாகப்பட்டினம்-பலாசா பயணிகள் ரயில் பின்னால் இருந்து மோதியதில் சில பெட்டிகள் தடம்புரண்டன.

இந்த விபத்தில் முதலில் 8 பேர் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது உயிரிழப்பு 14 ஆக அதிகரித்துள்ளது. 

கிழக்கு கடற்கரை ரயில்வே அதிகாரி பிஸ்வாஜித் சாஹு இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், 

ரயில் விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 29 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டனர். இன்று மாலைக்குள் மீட்புப் பணிகள் முடிவடைந்து, ரயில் பாதைகள் சரி செய்யப்படும்' என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொண்டர்களை ஒழுங்குபடுத்த வேண்டாமா? TVK-வுக்கு நீதிமன்றம் கேள்வி! | செய்திகள்: சில வரிகள் | 18.9.25

மாத்தளை சோமு நூறு சிறுகதைகள்

அருந்ததி ராயின் புத்தக அட்டைப் படத்துக்கு எதிரான வழக்கு! மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

பழந்தமிழர் மரபும் கலையும்

அமெரிக்காவில் போதைப்பொருள் விவகாரம்! தொடர்புடைய இந்தியர்கள் விசாவுக்கு தடை!

SCROLL FOR NEXT