இந்தியா

எந்த கிரிக்கெட் வீரருக்கும் பரிசளிப்பதாக அறிவிக்கவில்லை: ரத்தன் டாடா மறுப்பு!

எந்த கிரிக்கெட் வீரருக்கும் பரிசளிப்பதாக அறிவிக்கவில்லை, தவறான வாட்சப் ஃபார்வர்டுகளை நம்பவேண்டாம் என தொழிலதிபர் ரத்தன் டாடா கூறியுள்ளார்.

DIN

தொழிலதிபர் ரத்தன் டாடா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிற்கோ அல்லது எந்த கிரிக்கெட் வீரருக்கோ பரிசளிப்பதாக தான் எந்தவொரு அறிவிப்பும் செய்யவில்லை என்று தொழிலதிபர் ரத்தன் டாடா கூறியுள்ளார்.

இதுகுறித்து ரத்தன் டாடா அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “எந்தவொரு கிரிக்கெட் வீரருக்கும் வெகுமதி வழங்குவது பற்றி ஐசிசி அல்லது பிற கிரிக்கெட் கவுன்சிலிடம் நான் கூறவில்லை. கிரிக்கெட்டுடன் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை. எனது அதிகாரப்பூர்வ தளங்களை தவிர்த்து வரும் வாட்சப் ஃபார்வர்டுகள் மற்றும் விடியோக்களை நம்பவேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கானுக்கு ரத்தன் டாடா ரூ.10 கோடி பரிசுத்தொகை அறிவித்ததாக போலியான வாட்சப் ஃபார்வர்டுகளும், விடியோக்களும் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து ரத்தன் டாடா இந்தப் பதிவினை பதிவிட்டுள்ளார். 

திங்கள்கிழமை ஆப்கானிஸ்தான் உலகக்கோப்பை போட்டியில் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. மேலும் 50 ஓவர் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி

முழு சந்திர கிரகணம் தொடங்கியது!

சின்ன திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள்!

விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது: அமைச்சர் ராஜகண்ணப்பன்

களிப்பு... பாயல் ராதாகிருஷ்ணா!

SCROLL FOR NEXT