இந்தியா

ஆதித்யா எல்-1: திருப்பதியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு!

ஆதித்யா விண்கலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். 

DIN

ஆதித்யா விண்கலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். 

நிலவுக்கு சந்திரயான் -3 விண்கலம் அனுப்பப்பட்டதையடுத்து சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ தயாராக உள்ளது. 

இதற்கான கவுண்ட் டவுன் இன்று(வெள்ளிக்கிழமை) காலை தொடங்கியுள்ள நிலையில் நாளை(செப். 2) காலை 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் சுமாா் 1,475 கிலோ எடை கொண்ட ஆதித்யா விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ளது. 

இதையொட்டி, இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தனர். ஆதித்யா-எல்1 விண்கலத்தின் சிறிய மாதிரியை வைத்து வழிபாடு செய்தனர். 

முன்னதாக, சந்திரயான் -3 விண்ணில் செலுத்துவதற்கு முன்பும் இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதியில் சாமி தரிசனம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

விஜய் இப்போது நடிகர் கிடையாது: அருண் ராஜ்

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

SCROLL FOR NEXT