முகப்பு
இந்தியா

ராஜ்நாத் சிங்கின் இலங்கை பயணம் திடீர் ஒத்திவைப்பு

பாதுகாப்புத் துறை ராஜ்நாத்தின் 2 நாள் இலங்கை பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

Updated On : 1 செப்டம்பர் 2023, 10:10 pm IST
கோப்புப்படம்
பகிர்:

பாதுகாப்புத் துறை ராஜ்நாத்தின் 2 நாள் இலங்கை பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நாளை இலங்கை செல்வார் என பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

மேலும் இந்தப் பயணத்தின் போது, இலங்கை அதிபரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவையும், பிரதமர் தினேஷ் குணவர்தனவையும் ராஜ்நாத் சிங் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் கூறப்பட்டது. 

Advertisement

Advertisement

இந்த நிலையில் தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே வலுவான இருதரப்பு ஒத்துழைப்புக்கு ராஜ்நாத் சிங் உறுதியாக இருக்கிறார் என்றும் விரைவில் இலங்கைக்கு செல்வதை அவர் எதிர்நோக்கி உள்ளார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.