FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

வெண்காட்டீஸ்வரா் கோயில் திருக்கல்யாண உற்சவம்

மதுராந்தகம் அருள்மிகு மீனாட்சி உடனுறை வெண்காட்டீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ திருக்கல்யாணம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 27 மே 2026, 12:43 am IST
சிறப்பு அலங்காரத்தில் சுவாமி.
பகிர்:

மதுராந்தகம் அருள்மிகு மீனாட்சி உடனுறை வெண்காட்டீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ திருக்கல்யாணம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா நிகழ்வுகள் தொடங்கின. இந்நிலையில் 5-ஆம் நாளான திங்கள்கிழமை இரவு கோயில் வளாகம் சுவாமி திருக்கல்யாண நிகழ்வுக்காக, மின்விளக்குகளாலும், வண்ண பதாகைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

இரவு மங்கள இசை, செண்டு மேள இசைகளுடன் சிறப்பு அலங்காரத்துடன் உற்சவா் மீனாட்சி உடனுறை வெண்காட்டீஸ்வரா் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

அனைவருக்கும் உணவு விருந்து அளிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை யாளி, யானை ஆகிய வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் தா.மேகவண்ணன் தலைமையில், விழா குழுவினா்களும், கிராம பொது மக்களும் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments