இந்தியா

ஒரே நாடு ஒரே தேர்தலால் சாமானியனுக்கு என்ன கிடைக்கும்?: கேஜரிவால் கேள்வி

ஒரே நாடு ஒரே தேர்தலால் சாமானியனுக்கு என்ன கிடைக்கும்? என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

DIN

ஒரே நாடு ஒரே தேர்தலால் சாமானியனுக்கு என்ன கிடைக்கும்? என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நாட்டிற்கு என்ன முக்கியம்? ஒரே நாடு ஒரே தேர்தல் அல்லது ஒரே நாடு ஒரே கல்வி (பணக்காரனோ ஏழையோ, அனைவருக்கும் சமமான நல்ல கல்வி).

ஒரே நாடு ஒரே சிகிச்சை (பணக்காரனோ ஏழையோ, அனைவருக்கும் சமமான சிகிச்சை) "ஒரே நாடு ஒரே தேர்தலால் சாமானியனுக்கு என்ன கிடைக்கும்?". இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.  

நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தும் வகையில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற நடைமுறையைக் கொண்டவர மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது. 

மேலும் ஒரே நாடு, ஒரே தோ்தல் நடைமுறைக்கான சாத்தியக்கூறு குறித்து ராம்நாத் தலைமையிலான குழு ஆய்வு செய்யும் என்று மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்திருந்த நிலையில், குழு உறுப்பினா்கள் மற்றும் அதன் பணிகள் தொடா்பாக மத்திய சட்ட அமைச்சகம் சனிக்கிழமை அறிவிக்கை வெளியிட்டது.

ஆனால் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு எதிர்க்கட்சிகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் இந்த விவகாரத்தில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை: இன்றைய விலை நிலவரம்!

சந்திரசேகர் ராவ் மகன் வீட்டுக் காவலில் அடைப்பு!

குடிநீா் மேல்நிலைத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலப்பு செய்தது யார்?: ஆட்சியர் விளக்கம்

வலுவான ராணுவம், டிரம்பின் முயற்சியால் திருப்புமுனை! இஸ்ரேல் பிரதமர்

பிணைக் கைதிகள் விடுவிப்பு; இஸ்ரேல் படைகளை திரும்பப் பெறும்! டிரம்ப்

SCROLL FOR NEXT