ஜி20: தில்லியில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு!
தில்லியில் ஜி20 மாநாடு நடைபெறுவதையொட்டி செப்.8 முதல் செப்.10 வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து தில்லி பொதுப்பணித்துறை அமைச்சர் அதிஷி தகவல் தெரிவித்துள்ளார்.
தில்லியில் ஜி20 மாநாடு நடைபெறுவதையொட்டி செப்.8 முதல் செப்.10 வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து தில்லி பொதுப்பணித்துறை அமைச்சர் அதிஷி தகவல் தெரிவித்துள்ளார்.
ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை வகித்து வருகிறது. அக்கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கும் மாநாடு செப்டம்பா் 9, 10-ஆம் தேதிகளில் தில்லியில் உள்ள 'பாரத் மண்டபத்தில்' நடைபெறவுள்ளது.
இதற்காக தில்லியின் பிரகதி மைதானம் பிரம்மாண்டமாக தயாராகி வருகின்றது. முக்கிய தலைவர்கள் பலர் கலந்துகொள்வதால் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜி20 மாநாடு நடைபெறுவதையொட்டி தில்லியில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செப்.8-10 வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் தலைவா்கள் அதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.