பிகாரில் இந்தாண்டு இறுதியில் மக்களவைத் தேர்தலை நடைபெறுவதையொட்டி, செப்.16ல் ஜாஞ்சர்பூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.
இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் அமித் ஷா, கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் சாதனைகளை மக்களுக்குத் தெரிவிப்பார் என்று பாஜக மூத்த தலைவர் கூறியுள்ளார்.
பாஜக தலைவர் சாம்ராட் சௌத்ரி, உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் உள்பட பாஜகவின் அனைத்து முக்கிய தலைவர்களும் கட்சியின் மாவட்ட தலைவர்களும் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.
பிகார் பயணத்தின்போது மத்திய உள்துறை அமைச்சர் ஜோக்பானியில் இந்திய-நேபாள எல்லையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியைத் திறந்துவைக்க உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.