இந்தியா

தெலங்கானாவில் கர்ப்பிணி பெண்ணை டோலியில் சுமந்து சென்ற குடும்பத்தினர்!

DIN

தெலங்கானாவில் சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் தங்கள் கிராமத்தை அடைய முடியாததால் கர்ப்பிணிப் பெண் ஒருவர் காட்டுப் பகுதி வழியாக 'டோலி'யில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடிப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அவரது குடும்பத்தைச் சேர்ந்த இருவர் 'டோலி'யில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் தோளில் சுமந்தபடி சத்தியநாராயணபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அந்த பெண் சுகாதார மையத்திலிருந்து ஆம்புலன்சில் பத்ராச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தற்போது தாயும், சேயும் நலமுடன் இருப்பதாகவும் விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விஜய் சேதுபதி 51’: படத் தலைப்பு அப்டேட்!

ஸ்லோவாகியா பிரதமர் விவகாரம்: சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டில் சோதனை!

நவாப் ராணியின் ஆன்மா...!

உதய்பூரில் சன்னி லியோன்!

10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? பிரதமர் மோடி பதில்!

SCROLL FOR NEXT