ராகுலின் ஒற்றுமை நடைப்பயணம் வெறும் உடல் முயற்சி மட்டுமல்ல, உடைந்த மனசாட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நேர்மையான முயற்சி என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரின் சுட்டுரை பதிவில்,
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை நடைப்பயணத்தின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி சமூகத்தில் வெறுப்பு மற்றும் விரோதப் போக்கின் மூலம் தொடர்ந்து போராடி வருவதாக அவர் கூறினார்.
பாரத் ஜோடோ யாத்திரை என்பது வெறும் உடல் முயற்சி மட்டுமல்ல உடைந்த மனசாட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நேர்மையான முயற்சியாகும்.
நீதி, சுதந்திர சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவை எங்களைப் பொறுத்தவரை மிக உயர்ந்தவை. நமது அரசியலமைப்பை மீட்டெடுக்கவும், நமது ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மக்களைச் சென்றடைகிறது எனப் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2022-ல் இந்த நாளில் நாட்டின் தென்முனையான கன்னியாகுமரியில் காங்கிரஸ் யாத்திரையைத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.