கோப்புப்படம் 
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் பறந்த பாகிஸ்தான் கொடியால் பரபரப்பு!

​வெள்ளை மற்றும் பச்சை நிற பலூன்களில் கட்டிவிடப்பட்ட பாகிஸ்தான் கொடி ஜம்மு-காஷ்மீரின் உதாம்பூரில் பறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

DIN

வெள்ளை மற்றும் பச்சை நிற பலூன்களில் கட்டிவிடப்பட்ட பாகிஸ்தான் கொடி ஜம்மு-காஷ்மீரின் உதாம்பூரில் பறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக உதாம்பூர் காவல் நிலையம் சார்பில் தெரிவித்ததாவது: வெள்ளை மற்றும் பச்சை நிற பலூன்களில் பாகிஸ்தான் கொடி கட்டிவிட்டப்பட்டு ஜம்மு-காஷ்மீரின் உதாம்பூரில் உள்ள பயாலா கிராமத்தில் வானில் பறந்துள்ளது. உள்ளூர் மக்கள் பலூனில் கொடி கட்டியிருப்பதை பார்த்து காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அந்த பலூனை காவல் துறையினர் கைப்பற்றினர். பாகிஸ்தானில் பறக்கவிட்டப்பட்ட பலூன் திசைமாறி இந்திய எல்லைக்குள் வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காவல் துறையினர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு விமான வடிவத்தில் பாகிஸ்தான் கொடி நிறத்தைக் கொண்ட பலூன் ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்திலும், கடந்த 2021 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கொடியுடன் ”ஐ லவ் பாகிஸ்தான்” என்ற வாசகம் அடங்கிய பலூன்கள்  பஞ்சாபின் ரூப்நகரிலும் தென்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆர்எஸ்எஸ் - 100! சிறப்பு நாணயம் வெளியிட்ட பிரதமர் மோடி!

ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமாருக்கு காவல் துறை சம்மன்!

இலங்கை சிறையில் இருந்து ஆந்திர மீனவர்கள் 4 பேர் விடுதலை!

பிரணவ் மோகன்லாலின் டைஸ் ஐரே டிரைலர்!

பூந்தளிர்... பாயல் ராதாகிருஷ்ணா!

SCROLL FOR NEXT