மகாராஷ்டிரத்தில் பேருந்து-லாரி மோதல்: 55 பேர் காயம்!
மகாராஷ்டிரத்தில் பால்கர் மாவட்டத்தில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 55 பேர் காயமடைந்தனர்.
மகாராஷ்டிரத்தில் பால்கர் மாவட்டத்தில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 55 பேர் காயமடைந்தனர்.
சாலைப் போக்குவரத்துக்குக் கழகத்தின் அதிகாரி கூறுகையில், வாடா தாலுகாவில் உள்ள தேசாய் கிராமத்திற்கு அருகே இன்று காலை 6.45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
சின்ச்பாடா-வாடா சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது எதிர்த்திசையில் வந்த லாரி மோதியது. பேருந்தில் 47 மாணவர்கள் உள்பட மொத்தம் 70 பேர் பயணித்தனர்.
படிக்க: 12 ராசிக்குமான வாரப் பலன்கள்!
இந்த விபத்தில் 55 பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக லாரி ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.