இந்தியா

செப்.11-ல் புதுப்பள்ளி எம்எல்ஏவாக பதவியேற்கிறார் சாண்டி உம்மன் 

சாண்டி உம்மனின் பதவியேற்பு செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெறும் என சட்டப்பேரவை செயலகம் தெரிவித்துள்ளது.

DIN

சாண்டி உம்மனின் பதவியேற்பு செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெறும் என சட்டப்பேரவை செயலகம் தெரிவித்துள்ளது.

கேள்வி நேரம் முடிந்ததும் புதுப்பள்ளி எம்எல்ஏவாக அவர் பதவியேற்பார் என்றும் அவை நடவடிக்கைகளை அரசு நடத்தும் சபா தொலைக்காட்சியில் நேரடியாகக் காணலாம் என்றும் பேரவைச் செயலகம் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே இடைத்தேர்தல் அறிவிப்பால் தடைபட்ட பேரவைக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை முதல் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூலை 18ஆம் தேதி உம்மன் சாண்டி மறைவைத் தொடர்ந்து புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்தல் செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் வெற்றி பெற்றுள்ளார். சாண்டி உம்மன் மொத்தம் 78,098 வாக்குகள் பெற்றுள்ளார். இவர் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி வேட்பாளர் ஜெயிக் தாமஸைவிட 37,719 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

இதன் மூலமாக சாண்டி உம்மன் தனது தந்தை உம்மன் சாண்டியின் சாதனையை முறியடித்துள்ளார். கடந்த 2011 தேர்தலில் புதுப்பள்ளி தொகுதியில் உம்மன் சாண்டி 33,255 வாக்குகள் வித்தியாசம் என்பதே அதிகபட்சமாக இருந்தது. இதனை சாண்டி உம்மன் இப்போது முறியடித்துள்ளார். உம்மன் சாண்டி, புதுப்பள்ளி தொகுதியில் 53 ஆண்டுகள் எம்எல்ஏவாகவும், 10 ஆண்டுகள் மாநிலத்தின் முதல்வராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் வெளியிட்ட விடியோ! |மனசு முழுக்க வலி! |Vijay video

அக். 3 பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுமா?

கரூர் செல்லாதது ஏன்? விடியோ வெளியிட்டார் தவெக தலைவர் விஜய்

திருவண்ணாமலை பாலியல் வன்கொடுமை: முதல்வர் என்ன பதில் வைத்துள்ளார்?

“கரூர் பலி: திட்டமிடப்பட்டதா?” அமைச்சர் Anbil Mahesh பதில்! | Karur | TVK | VIJAY | DMK

SCROLL FOR NEXT