முகப்பு
இந்தியா

ஜி20 மாநாடு: வளர்ச்சிக்கான புதிய பாதைகளை அமைக்கும்! -மோடி

இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாடு வளர்ச்சிக்கு புதிய பாதையை வகுக்கும் என நம்புவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:12 PM
பகிர்:

இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாடு வளர்ச்சிக்கு புதிய பாதையை வகுக்கும் என நம்புவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

ஜி-20 மாநாடு தில்லியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (செப்.9, 10) நடைபெறுகிறது. இதற்காக ஜி-20 கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் தலைநகர் தில்லிக்கு வருகை புரிகின்றனர். இதனையொட்டி தில்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

தலைநகர் தில்லிக்கு வருகைபுரியும் தலைவர்களை மத்திய அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் வரவேற்கின்றனர். 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், மொரிஷியஸ் பிரதமர் பிரவீந்த்குமார் ஜக்னாத், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ருடோ, சீன பிரதமா் லி கியாங் உள்ளிட்டோர் வருகை புரிந்துள்ளனர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →