முகப்பு
இந்தியா

ஆர்ஜென்டீனா அதிபர் தில்லி வந்தடைந்தார்!

ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆர்ஜென்டீனா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் தில்லி வந்தடைந்தார். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:12 PM
பகிர்:

ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆர்ஜென்டீனா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் தில்லி வந்தடைந்தார். 

தில்லி விமான நிலையத்தில் பெர்னாண்டஸை எஃகு மற்றும் ஊரக வளர்ச்சிக்கான இணை அமைச்சர் பக்கன் சிங் குலாஸ்தே வரவேற்றார். பிரிக்ஸ் மாநாட்டில் சேர்க்கப்பட்ட ஐந்து புதிய நாடுகளில் அர்ஜென்டினாவும் உள்ளது. 

தலைநகர் தில்லியில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பல உலக தலைவர்கள் வருகையளித்து வருகின்றனர். உலகின் அதிகாரம் மிக்க தலைவர்கள் தில்லியில் முகாமிட்டு வருவதால் தலைநகரில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →