இந்தியா

ஹரியாணாவில் இந்த ஆண்டு 200 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும்: முதல்வர் மனோகர் லால் கத்தார்

ஹரியாணாவில் இந்த ஆண்டு 200 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று முதல்வர் மனோகர் லால் கத்தார் தெரிவித்துள்ளார்.  

DIN

ஹரியாணாவில் இந்த ஆண்டு 200 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று முதல்வர் மனோகர் லால் கத்தார் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து இளைஞர்களுடன் உரைறயாற்றி அவர், ஜனவரி 2019 முதல் தற்போது வரை மாநிலத்தில் 1,450 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் 31,217 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 200 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும். 
அரசுத் துறையில், 14 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 56,000 அரசு வேலைகள் இளைஞர்களுக்கு வழங்கப்படும். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு வேலைகள் முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடன் தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. 
ஹரியாணா திறன் மேம்பாட்டு இயக்கத்தின் மூலம் 80,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். ஸ்ரீ விஸ்வகர்மா திறன் பல்கலைக்கழகம் இளைஞர்களுக்கு பயிற்சி மற்றும் தொழில் சார்ந்த கல்வியை வழங்குவதற்காக நிறுவப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT