இந்தியா

ஜி20 கூட்டறிக்கை: உறுப்பு நாடுகள் ஒப்புதல்!

உக்ரைன் - ரஷியா போர் விவகாரம் தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்படுவதில் இழுபறி நீடித்த நிலையில், கூட்டறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

DIN

ஜி20 மாநாட்டுக்கான கூட்டறிக்கைக்கு உறுப்பு நாடுகள் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளன. இதனைத் தொடர்ந்து விரைவில் கூட்டறிக்கை வெளியிடப்படவுள்ளது.

உக்ரைன் - ரஷியா போர் விவகாரம் தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்படுவதில் இழுபறி நீடித்த நிலையில், கூட்டறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், செளதி அரேபியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்டவை பொருளாதார வழித்தடத்தில் இணைந்துள்ளன. ஜி20 மாநாட்டுக்கான கூட்டறிக்கை அம்சங்களில் ஒன்று இதுவாகும். 

ஜி-20 மாநாட்டில் மிக முக்கிய அம்சமாக உறுப்பினர்களின் கூட்டறிக்கை பார்க்கப்படுகிறது. கூட்டறிக்கை வெளியாக உதவிய அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘டியூட்’ படப் பாடல்களை நீக்கக் கோரி இளையராஜா வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

சிவா பிள்ளையல்ல... தமிழ்ப் பிள்ளை!

வளர்ச்சியடைந்த பாரதமே இலக்கு!

இந்தியாவின் உயிர்த்துடிப்பு!

கூடுதல் தகவலுடன் கடைக்காரா் கொலை வழக்கில் 5 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

SCROLL FOR NEXT