இந்தியா

ஜி-20 அமைப்பின் தலைமை பிரேசிலிடம் ஒப்படைப்பு

அடுத்த ஜி-20 மாநாட்டை நடத்தும் தலைமை பொறுப்பை பிரேசிலிடம் பிரதமர் மோடி ஒப்படைத்தார். 

DIN

அடுத்த ஜி-20 மாநாட்டை நடத்தும் தலைமை பொறுப்பை பிரேசிலிடம் பிரதமர் மோடி ஒப்படைத்தார். 

தில்லியில் இந்தியா தலைமையில் ஜி-20 மாநாட்டின் 2ஆம் நாள் கூட்டம் இன்று காலை தொடங்கியது. அப்போது, பிரேசில் அதிபர் லூலா டா சில்வாவிடம் ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை பிரதமர் மோடி ஒப்படைத்தார்.

முன்னதாக தில்லி ராஜ்காட்டில் காந்தி நினைவிடத்தில் ஜி-20 நாடுகளின் தலைவர்களோடு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். 

தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், கனடா பிதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்பட பல்வேறு நாட்டு தலைவர்களும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கி வரும் நிலையில், சிகர நிகழ்வான உச்சி மாநாடு தில்லியில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதற்காக, உலகத் தலைவா்கள் தில்லியில் முகாமிட்டுள்ளனா். ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை, அடுத்தடுத்த ஆண்டுகளில் பிரேசில், தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா ஆகிய நாடுகள் வகிக்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

SCROLL FOR NEXT